Thursday 4 May 2017

மஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்

ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம், முதலியவை மிகவும் ப்ரசித்தமானவை. அதேபோல் ஆசார்ய பக்த ஸ்ரேஷ்டரான "ஸரஸ கவி" ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா நமது பரமாசார்யர்களின் மேல் பாடியிருக்கிறார்கள். ப்ராதஸ்மரணீய மஹாபுருஷர்களான ஸ்ரீ ஆசார்யர்களை காலையில் ஸ்மரித்து இந்த ஸ்தோத்திரத்தை சொல்வது மிக்க மிக்க க்ஷேமகரம்.

            ப்ராதஸ்மராமி பவதீய முகாரவிந்தம்
            மந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்
            சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்
            காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்


திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி
ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி
வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

கலிதோஷத்தை நீக்குபவரே!  அருளிதயம் கொண்டுஅங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே!  கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே!  காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.  கை தூக்கி  எனக்கருளுங்கள்.

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்
பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்
ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும்குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய
யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:
ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

ந‌டையிலும்கூரிய‌ பார்வையிலும்வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே! க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிடகாலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்யரேண:
ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்
ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும்இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கிஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌.

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச மமாப்ராதும்
த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபத்த தீக்ஷா:
ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

குறைக‌ளைதோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே!  காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்
யஸ்மாத் ப்ரயாந்தி துரிதாணி மஹாந்தி தாணி
ஆயாந்தி தாணி முஹரத்ய சுமங்களானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால்,  அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ,  ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோஅத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச
த்யானாச்ச பாபநி லயம் ப்ரயாந்தி 
ஹே தீர்த்த பாதானுஸவம் பதம் தே
தீர்த்தம் ச தீர்த்திகரணம் பஜாமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

குளிக்கும்போதும்உண்ணும் [குடிக்கும்] போதும்தனியே துதிக்கும்போதும்தியானம்புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகிஓடிவிடுமோ,  [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டிநல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்குஅ‌ருளுங்கள்.


அற்புதமான இந்த ஸ்லோகத்தினை முழுமனதோடு லயித்து அனுதினம் காலையில் பாராயணம் செய்ய ஸர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமஹாஸ்வாமியின் அருள் கிட்டுவது திண்ணம்.  எனது வாழ்வில் நான் அனுபவித்த மஹிமை இது.

No comments:

Post a Comment