Tuesday 12 November 2013

தாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013




மஹா ஸ்வாமியின்  அருளால் 
மஹா ஸ்வாமிக்கு  அடியேனின் 108வது பாடல்.

ஆயிரம் பாமாலை பாடிடுவோம் - உம்மை
தாயினும் மேலான மஹா ஸ்வாமி
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்போமே - உம்மை
வயிரமாய் ஜொலிக்கும் மஹா ஸ்வாமி
தாயாய் உந்தன் தயவை நாடி
சேயாய் நாங்கள் தேடி வந்தோம்
காயாய் உள்ள வாழ்கையை நீர்
கனியாய் மாற்றியே அருள்வீரே

ஓயாத துன்பங்கள் வாழ்வினிலே - என்றும்
ஓயாமல் காப்பீர் மஹா ஸ்வாமி
தீயாக வினைகள் தீண்டிடுதே - என்றும்
ஜோதியாக ஜொலிக்க அருள்புரிவீர்
மாயா மலங்கள் மாய்ந்து போக
ஓயா துன்பங்கள் ஓய்ந்து போக
தீயவை என்றும் தீண்டிடாது
தூயவனே நீர் காத்தருள்வீர்

புயலாய் வாழ்வில் சீற்றங்களே - எங்கும்
பேயாய் அலைந்தோம் பாரினிலே
நிழலாய் நீர் என்றும் வந்திடுவீர் - நாங்கள்
எழிலாய் ஏற்றம் பெற அருள்வீர்
வெய்யிலில்  வாடியே வதங்கிடும்
பயிராய் நாங்கள் பரிதவித்தோம்

ஓய்வின்றி வாழ்வினில் உழன்றோமே - என்றும்
தொய்வின்றி துளிர்த்தெழ அருள்வீரே
தேய்வின்றி வாழ்வினில் வளர்ந்திடவே - என்றும்
ஓய்வின்றி அருள்வீர் மஹா ஸ்வாமி
மெய் வாய்  கண் புலன்களால்
செய்திட்ட பழி பாவச் செயல்களை
தூய்மை செய்ய தூயவரே
உய்யும் வழி உரைப்பீர் மஹா ஸ்வாமி

-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்.

Thursday 7 November 2013

மாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013


மாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013
(ஜெய் ஜெகதீஷ ஹரே - மெட்டு)
(தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்)



ஐங்கரன் சோதரனே - எங்கள்
சங்கரன் மைந்தனே நீ
பங்கஜ விழியால் பார்த்தே அருள்வாய் (2)
சங்கடம் தீர்த்திடுவாய் - எங்கள்
மாடயம் பதி முருகா

சரவண பவனே சண்முக நாதா
வரம் தர  வந்து  நின்றாய்
கரம் குவித்துனையே கண்மூடி தொழவே (2)
வரம் தந்தருள்பவனே - எங்கள்
மாடயம் பதி முருகா

செவ்வாய் விரித்தே சிரித்துடு  வாயே
நீ வாய் திறந்து நன்றே
பூவாய் மலர்ந்தே புன்னகை பூத்தே (2)
ஈவாய் யாவையுமே - எங்கள்
மாடயம் பதி முருகா

ஓங்கார ரூபனே ஒப்பிலா முருகா
சிங்கார சிவ பாலா
சங்கீதம் பாட சந்தோஷமடைந்து (2)
மங்களம் அருள்வாயே - எங்கள்
மாடயம் பதி முருகா

வள்ளி தெய்வானை இருபுறம் நிற்க
அள்ளியே அருள்புரிவாய்
துள்ளியே உன்னை துதித்தே பாடிட (2)
வெள்ளியாய் முகம் மலர்வாய் - எங்கள்
மாடயம் பதி முருகா
அருண கிரிநாதர் அன்றே உந்தன்
அருளை பாடினாரே
கருணை தெய்வமே காக்கும் குகனே (2)
வருணனாய் அருள் புரிவாய் - எங்கள்
மாடயம் பதி முருகா

கிருத்திகை நாளில் விரதம் இருந்தே
ஒரு விளக்கேற்றிடவே
ஒரு தனிப் பொருளே ஓர்வரம் அருள்வாய் (2)
வருத்தங்கள் போக்கிடுவாய் - எங்கள்
மாடயம் பதி முருகா


மாடயம்  பதியில் கேடயம் போல் நீ
காத்திட வந்தவனே
வாடிய மனங்களின் வாட்டத்தை போக்கி (2)
தேடிய தருள்வாயே - எங்கள்
மாடயம் பதி முருகா

முருகா முருகா என்றே உருகிட
வருவாய் துணையாய் நீ
திருவாய் மலர்ந்தே தருவாய் அருளை (2)
குருவாய் வருவாயே - எங்கள்
மாடயம் பதி முருகா

 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God



Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪