Monday 27 May 2013

குரு சரண கானம்




                 குரு சரண கானம்               -தேனுபுரீஸ்வர தாசன்
            (பிரம்ம முராரி - மெட்டு)

குரு பக   வானே  குரு பக   வானே
குறைகள்   களைவாய்  குரு பக   வானே
ஒரு நிகர்    இல்லா   குரு பக   வானே 
வரும்நாள்   வளமாக    வரமருள்   வாயே

வருடத்தில் ஒருவீடு மாறிடும் குருவே
நிமிடத்தில் அருள்வாய் நல்லதோர் வாழ்கை
மாதத்தில் ஒரு முறை மாற்றம் தருவாய்
வாரத்தில் ஒருமுறை வழிபட உன்னை

குருவாரம் அன்று வருவோம் நாங்கள்
ஒருவரம் வேண்டி இருகரம் கூப்பி
மறுவாரம்  வரும்முன் அருள்வாய் நீயே
ஒரு  வரத்துடனே ஒப்பற்ற வாழ்கை

மஞ்சள் வஸ்திரம் சற்றிட உனக்கு
நெஞ்சம் மகிழ்ந்து அருள்வாய் நீயே
பஞ்சுத்  திரிகொண்டு பசுநெய் விளக்கேற்ற
அஞ்சித் திரிந்தோர்க்கு அபயம் அளிப்பாய்

கடலை மாலை கோர்த்தே  சாற்றிட
உடலை வருத்தும் உபாதை குறிப்பாய்
கடலை  போன்ற எம்  துயர்தனை நீயே
சுடலை பொடி போல்   சுட்டெரிப்  பாயே

பக்தியோ டுன்னை  பணிந்திட்ட உடனே
உத்தியோக உயர்வை அளிப்பாய் நீயே
வியாழக் கிழமையில் வலம் வர உன்னை
நியாயமாய் வாழ்வை நிலைக்கச் செய்வாய்

குருபார்வை  கிடைத்திட  கோடி நன்மையே
ஒருபார்வை  பார்ப்பாய் என்னை நீயே
குருபார்க்க வாழ்வில் விடியல் வந்திடும்
குருவே பார்ப்பாய் இரு விழியாலே

குருவாரம் உன்னை வலம் வருவோர்க்கு
குருபலன் கூடி ஒருவரம்  அருள்வாய்
இருமனம்  இணைத்து திருமணம் புரிவாய்
நறுமணம் வாழ்வில் நிலைக்கச் செய்வாய்

குருவே சரணம் குறைகள் களைவாய்
திருவே சரணம் நிறைகள் அருள்வாய்
வருவேன் வலமே வியாழன் தோறும்
                                                தருவாய் நீயே  தைரியம் நாளும் 


visit

www.aanmeegaula.blogspot.in 

www.songsbyshanks.blogspot.in


Please frwd this guru song to all ur contacts.  Let them read this and have GURU ARUL....!



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday 24 May 2013

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்
(பிரம்ம முராரி  - மெட்டு )

அனுஷத்தில்  பிறந்திட்ட காஞ்சி மாமுனியே
நிமிஷத்தில் அருள்வார் நித்திய இன்பம்
வருஷத்தில் பன்னிரெண்டு அனுஷத்தில் வணங்கிட
கிரக தோஷம் போக்கி சந்தோஷம் அளிப்பார்

ஜெகம்காக்க  வந்திட்ட ஜெகத்குரு  அவரின்
முகம் பார்க்க  மலர்வோம் முன்வினை தீர்ந்து
யுகம் யுகமாக காத்திடும் அவரை
அகம் தனில் நினைத்து  அர்ச்சிப்போமே

ஈசனின் அம்சமாய்  காசிக்கும் நடந்தார்
தேசங்கள் காத்திட நேசமாய் நடந்தார்
பாசமாய் மக்களை பாரினில் வென்றார்
தாசனாய் மாறிட தயை புரிவாரே

நம்பி  கை கூப்பிட    நம்பிக்கை  அளிப்பார்
தும்பிக்கை பலத்தை   தூக்கி கை அளிப்பார்
வெம்பி வாடி வதங்கியே  சென்றோர்
தும்பிபோல்  திளிர்த்து துள்ளியே திரும்புவர்

வேதத்தை  வளர்த்திட பாதத்தால் நடந்தார்
கீதங்கள் பாடிட ஊக்கங்கள் தந்தார்
ஓர்திங்கள்  ஓரிடம் என்றே பறந்தார்
நேர்த்தியாய்  வாழ்ந்திட  நடந்தே காட்டினார்

கருவறை சிவனார் உருக்கொண்டு வந்தார்
தெருவெங்கும் நடந்தார் தெய்வீக சிலையாய்
வருவோர் குறை தீர்த்து வளர்ந்திடச்  செய்தார்
குருவாய் வருவார் இருட்டிலும் துணையாய்

திருக்கோயில் வழிபாடு திருந்திடச் செய்தார்
ஒருகோயில் ஊருக்குள் சிறந்திட செய்தார்
கற்கோயில் பலவற்றை திருப்பணி செய்தார்
நற்கோயில் நாடி நம் மனம் புகுந்தார்

மனதினுள் மஹா ஸ்வாமி  உள்ளார் என்றே
நினைத்தே  நாளும் நடந்திடு வோமே
தினையளவேனும்  அவர் வழி நடக்க
நினைத்திட உயர்வோம் வாழ்வில் தானே

இருட்டை விலக்கும் கை விளக்காக
அருட்குரு  அவரின் பாதையில் செல்வோம்
பொருட் செலவின்றி பொக்கிஷம் பெறுவோம்
அருட்காட்சி கிடைத்து ஆனந்த மடைவோம்
          -தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்


Planning to go to Mahaperiyavaa's adhishtaanam every month alongwith the darshan of atleast 10 puraadhana shiva temples of Thondai Naadu(approx. 180 temples to be covered)

Pls grab this opportunity to see all the shiva temples with GURU's blessings....

For more dtls cont @ 98847 18 324.





Thursday 16 May 2013

காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

(தெளிசிதே மோட்சமு  - மெட்டு)

சந்திர சேகர  சரஸ்வதி  ஸ்வாமியே
சந்திரனை சூடிய சுந்தர ஈஸ்வரா
உன் திரு  உருவையே  உளமாற  நினைத்திட
வந்திடும்  வெற்றியே  வாழ்வினில் என்றுமே

விழுப்புரத்தில்  பிறந்த முழு நிலா முகத்தோனே
கழுபிணி  தீர்த்திடும் காருண்ய ரூபனே
முழு பரம்  பொருளாய்  உனைச்  சரண்  அடைந்திடவே
முழுவதும்  காத்திடுவாய்  முற்பிறப்பும் அறிந்தவனே

முக்தி தலமாம்  காஞ்சியில்   முழு நிலவாய்  அமர்ந்தவா
முக்கண்ணனின் அம்சமாய் முக்தியும் தந்தவா
எக்கணமும் ஈசனை  எண்ணியே  வாழ்ந்தவா
முக்கனியின் சுவையாகும்  உன் நாமம் பெரியவா

வேதத்தை காத்திட வந்திட்ட சங்கரா
பாதத்தை பற்றும் முன் பரிவுடன் காப்பவா
மோகத்தை வென்று  நீ   மோன தவம் புரிந்தவா
யாகத்தை வளர்த்து நீ  ஞாலத்தை  காத்தவா

அரும் தவ  ஞானியே  அனைத்துமே  அறிந்தவா
வரும் துன்பம் அறிந்து நீ  விரட்டிடுவாய்  வேல் விழியால்
கரு மேக   மழையாய்  அருள்  மழையை  பொழிவாய்
கருணை விழிப்பார்வையால்  மன இருளை போக்கிடுவாய்

நேரும் துன்பம் நீக்குவாய்  நேர்த்தியாய் வழி நடத்தி
பேரும் புகழும் பெற்றிடுவோம்  பரமனே உன் பாதம் தொழ
ஊரும் பேரும் கேட்டு நீ  ஊழ்வினைகள் களைவாய்
யாரும் குருவாய் ஏற்றிட எங்கும் காத்து அருள்வாயே

நித்திய அனுஷ்டானம் நிர்மலமாய் செய்தாய்
பத்திய உணவு  உண்டு பாரினை காத்தாய்
சத்திய வாழ்க்கையை  சாதித்துக்  காட்டினாய்
நித்திய மங்களம்  அனைவருக்கும் அளித்தாய்

காஞ்சியின் சங்கரா  காலடி சங்கரா
காலங்கள் கடந்தவா காமகோடி சங்கரா
காலமெல்லாம்  உன்புகழ்  சொல்லிடுவோம் சங்கரா
காலடியை  தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

தித்திக்கும் கல்கண்டை  தந்திடுவாய் கைகளில்
தித்திக்கும் வாழ்கையை சித்திக்கச் செய்வாய்
எத்திக்கும் வேதங்கள்  ஒலித்திட செய்தாய்
சித்திக்கும்  சகலமும் உன் நாமம் சொல்லவே