Monday 26 November 2012

அருணாச்சல தரிசன கானம்

அருணாச்சல தரிசன கானம்

அருணையில் உறையும் கருணைக் கடலே
உருகியே வழிபட்டேன் உனையே ஐயா
முருகனின் தந்தையே முக்கண்ண முதல்வனே
வருவாய்  அருள்வாய் அருணாசலனே


கரம் குவித்துனையே  பார்த்திட உடனே
பரவசம் அடைந்தேன் அருணாசலனே
சிரம் தாழ்த்தி உன்னை வணங்கிய உடனே
பரசிவ சுகம் அதை உணர்ந்தேன் சிவனே


உன் திரு மலையை கண்ட உடனே
கண்பெற்ற பலனை அடைந்தேன் நானே
எண்ணங்கள் இன்றி வெண் திரையானேன்
விண் நோக்கி பறந்தேன் அருணாசலனே


பாரினில் உண்டோ உனக்கோர் ஈடு
வேறிடம் புகலே எனக்கேது கூறு
யாரிடம் சொல்வேன் உன்னை அன்றி சிவனே
ஓரிடம் தருவாய் அருணாசலனே


எத்தனை பிறப்புகள் எத்தனை இறப்புகள்
எத்தனை பிறப்பே நான் பிறப்பேனோ 
அத்தனை பிறப்பிலும் உனை மறவாதிருக்க
வழி துணை நீயே அருணா சலனே



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Thursday 22 November 2012

சிவசாயி கானம்

159. சிவசாயி கானம்  22.11.12 (வியாழன்)


கும்பிட கும்பிட குறைகள்  தீர்க்கும்  சாயிநாதரே
நம்பிட நம்பிட நலம் பல சேர்க்கும்  சாயிநாதரே
அம்புலி அணிந்த சிவ சொரூபன்
ஆபத்தில் காக்கும்  ஆபத்பாந்தவன்
சாயிநாதரே    சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி  ஜெய ஜெய   ஜெய சாயி

வேம்பின் நிழலில் குருவாய் அருளும்  சாயிநாதரே
வேம்பின் கசப்பை தேனாய் இனிக்கச் செய்யும்  சாயிநாதரே
நடம் புரிந்தருளும் நடராஜன்
சிக்கல் தீர்க்கும் சிவராஜன்
சாயிநாதரே   சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி   ஜெய ஜெய   ஜெய சாயி

ஷீரடி வந்த அருந்தவ சீலரே  சாயிநாதரே
போராடி வாழ்வோர் புகலிடம் நீயே  சாயிநாதரே
ஷீரடி வாசன் சிற்சபேசன்
பண்டரி புரத்து  பாண்டுரங்கன்
சாயிநாதரே   சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி   ஜெய ஜெய   ஜெய சாயி


துவாரக மாயியில் துயரங்கள் தீர்க்கும்  சாயிநாதரே
சாவடி வந்துன் சேவடி சேவிப்பேன் சாயிநாதரே
பொறுமையின் சிகர ராமனவன்
வறுமையை போக்கும் குபேரனவன்
சாயிநாதரே  சாயிநாதரே
ஓம் சாயி  ஸ்ரீ சாயி  ஜெய ஜெய   ஜெய சாயி



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday 16 November 2012

அழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா 16.11.2012

அழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா
அன்பான குமரனுக்கு ஹர ஹரோ ஹரா
அருமை வடிவேலனுக்கு  ஹர ஹரோ ஹரா
அரவணைக்கும் சரவணனே  ஹர ஹரோ ஹரா

ஆனைமுகன் தம்பிக்கு  ஹர ஹரோ ஹரா
ஆறுமுக வேலனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆதி குரு நாதனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுபடை தலைவனுக்கு ஹர ஹரோ ஹரா

இன்முகமே காட்டுவாயே ஹர ஹரோ ஹரா
இகபர சுகம்  தருவாய் ஹர ஹரோ ஹரா
இனி என்றும் துணை நீயே  ஹர ஹரோ ஹரா
இங்கு வந்து அருள்வாயே ஹர ஹரோ ஹரா

உன்திருமுகம்  காணவே ஹர ஹரோ ஹரா
உள்ளமே மகிழ்ந்திடுமே  ஹர ஹரோ ஹரா
உன் திருப்பெயர் சொன்னாலே ஹர ஹரோ ஹரா
உணர்ச்சியது  பொங்கிடுமே ஹர ஹரோ ஹரா

ஊறுகளை  களைபவா  ஹர ஹரோ ஹரா
ஊழ்வினையை தீர்ப்பாயே ஹர ஹரோ ஹரா
ஊர் தோறும் மலை மேலே ஹர ஹரோ ஹரா
ஊக்கம் தர அமர்ந்தாயே  ஹர ஹரோ ஹரா

எங்கள் குல தெய்வமே ஹர ஹரோ ஹரா
எங்கள் துணை நீ தானே ஹர ஹரோ ஹரா
என்றும் உன்னை தொழுதிடுவோம் ஹர ஹரோ ஹரா
என்றும் எனை காப்பாயே ஹர ஹரோ ஹரா

ஏக்கங்கள் தீர்ப்பவனே ஹர ஹரோ ஹரா
ஏரகச் செல்வனே  ஹர ஹரோ ஹரா
ஏத்திடுவோம் உன் நாமம் ஹர ஹரோ ஹரா
ஏற்றங்கள் அளிப்பாயே  ஹர ஹரோ ஹரா

ஐயப்பனின் சோதரனே ஹர ஹரோ ஹரா
ஐராவதம் பெற்றாயே ஹர ஹரோ ஹரா
ஐயமின்றி உனை தொழுவோம் ஹர ஹரோ ஹரா
ஐயங்கள் களைவாயே  ஹர ஹரோ ஹரா

ஒரு தனிப் பரம்பொருளே ஹர ஹரோ ஹரா
ஒப்பில்லா தெய்வமே ஹர ஹரோ ஹரா
ஒரு தமிழ் கடவுளே ஹர ஹரோ ஹரா
ஒரு ஆணின் பிள்ளையே ஹர ஹரோ ஹரா

ஓர் ஐந்து   முகம் கொண்டாய்  ஹர ஹரோ ஹரா
ஓதிமலை  தலத்தினிலே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறு அக்ஷரத்தை ஹர ஹரோ ஹரா
ஓயாமல் ஜெபிப்போமே ஹர ஹரோ ஹரா

ஔவையை  சோதித்தாய் ஹர ஹரோ ஹரா
ஔவைக்கு அருள்செய்தாய்  ஹர ஹரோ ஹரா
ஔடதம் நீ வருந்துவோர்க்கு ஹர ஹரோ ஹரா
சௌக்கியமாய்  வாழவைப்பாய்  ஹர ஹரோ ஹரா

Thursday 15 November 2012

முருகனுக்கோர் முத்தான பாடல் by தேனுபுரீஸ்வர தாசன் 15.11.2012

முருகனுக்கோர் முத்தான பாடல் by  தேனுபுரீஸ்வர தாசன்

ஹர ஹரோ ஹரா  முருகா  ஹர ஹரோ ஹரா
ஹர ஹரோ ஹரா  முருகா  ஹர ஹரோ ஹரா

சஷ்டியில் விரதமிருந்தால் ஹர ஹரோ ஹரா
இஷ்ட சித்தி அருள்வாயே ஹர ஹரோ ஹரா
சஷ்டி தோறும் வழிபடுவோம் ஹர ஹரோ ஹரா
கஷ்டங்களை போக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

நெற்றி கண்ணில் உதித்தவனே ஹர ஹரோ ஹரா
சுற்றி உன்னை பணிவோமே ஹர ஹரோ ஹரா
பற்றி நின்றோம் உன் பாதமே ஹர ஹரோ ஹரா
வெற்றிகளை  தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

கார்த்திகை பாலனே ஹர ஹரோ ஹரா
வார்த்தையால் உன்னை பாடி ஹர ஹரோ ஹரா
நேர்த்தியாய் வழிபட்டோம் ஹர ஹரோ ஹரா
பார்த்திடுவாய் எங்களை ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

ஓராறு முகம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
ஈராறு கரம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
பேர் நூறு கொண்டவனே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறுதல் தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

ஆறுபடி வீடுடையாய் ஹர ஹரோ ஹரா
ஆற்றுப்படை பாடச் செய்தாய் ஹர ஹரோ ஹரா
ஆறு  தலை கொண்டவனே ஹர ஹரோ ஹரா
ஆறுதலை தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருப்பரங்குன்றத்திலே  ஹர ஹரோ ஹரா
விருப்பங்கள் நிறைவேற்றுவாய் ஹர ஹரோ ஹரா
திருமணம் புரிந்து கொண்டாய் ஹர ஹரோ ஹரா
வருவோர் மனம் குளிர்விப்பாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருச்செந்தூர் கடற்கரையில் ஹர ஹரோ ஹரா
விருப்பமோடு அமர்ந்தாய் ஹர ஹரோ ஹரா
ஓர் அசுரன் சூரனையே ஹர ஹரோ ஹரா
இரு கூறாய்  ஆக்கினையே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

அப்பனுக்கே பாடம் சொல்ல ஹர ஹரோ ஹரா
ஸ்வாமிமலை அமர்ந்தாய் ஹர ஹரோ ஹரா
அப்பன் ஸ்வாமி  நீ தானே ஹர ஹரோ ஹரா
கூப்பிட நீ அருள்வாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

பழமான தெய்வமே ஹர ஹரோ ஹரா
பழனிமலை அமர்ந்தாயே ஹர ஹரோ ஹரா
கிழ வடிவில் வந்தவனே ஹர ஹரோ ஹரா
பழ வினைகள் தீர்த்திடுவாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருத்தணி மலை மீது ஹர ஹரோ ஹரா
ஒரு தனிப் பெருஞ்சுடரே ஹர ஹரோ ஹரா
வரும் துயரை போக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா
வருவோமே நாங்களே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

பழமுதிர் சோலையிலே ஹர ஹரோ ஹரா
தொழ மகிழ்வாய் நீயே ஹர ஹரோ ஹரா
வேழ முகன் சோதரனே ஹர ஹரோ ஹரா
பாழ் மனதை அடக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

அருணகிரி நாதரை ஹர ஹரோ ஹரா
அருணையிலே  ஆட்கொண்டாய்  ஹர ஹரோ ஹரா
கருணையில் காத்திட்டாய் ஹர ஹரோ ஹரா
வருணனாய்  பாட வைத்தாய் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

திருப்புகழால் உன் புகழை ஹர ஹரோ ஹரா
விருப்பமோடு  பாட வைத்தாய்  ஹர ஹரோ ஹரா
ஒரு நிகரில்லா  காவியமே  ஹர ஹரோ ஹரா
ஒரு மனதுடன் பாடி மகிழ்வோம் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Monday 12 November 2012

ஹர ஹரோ ஹரா முருகா ஹர ஹரோ ஹரா

Shivaaya Namaha,

 Maha kandha sashti during Nov 13 - 18 .

So visit the nearby murugar temples...  Here is a list for ur reference.

http://www.driveiin.com/chennai/listing/chennai/city-attractions/religious-spiritual-centers/hindu-temples/murugan-temples

முருகருக்காக இச்சிறியேனின் ஓர் எளிய பாடல்

ஹர ஹரோ ஹரா  முருகா  ஹர ஹரோ ஹரா

ஆறு படை வீடுடையாய்  ஹர ஹரோ ஹரா



அருணகிரிக்  கருளியவா ஹர ஹரோ ஹரா

ஆறுமுகப்  பெருமானே ஹர ஹரோ ஹரா

இம்மையில் காத்திடுவாய் ஹர ஹரோ ஹரா

ஈசனின் மைந்தனே ஹர ஹரோ ஹரா
(ஹர ஹரோ ஹரா முருகா . . .)


உலகையே சுற்றி வந்தாய் ஹர ஹரோ ஹரா

ஊர் தோறும் மலை மேலே
ஹர ஹரோ ஹரா

எழிலாக சென்றமர்ந்தாய்
ஹர ஹரோ ஹரா

ஏறி வந்தோம் உன்னைக்  காண
ஹர ஹரோ ஹரா
(ஹர ஹரோ ஹரா முருகா . . .)


ஐந்தெழுத்தின் உட்பொருளே
ஹர ஹரோ ஹரா

ஒப்பில்லா நாயகனே 
ஹர ஹரோ ஹரா

ஓங்கு புகழ் பெற வைத்தாய்
ஹர ஹரோ ஹரா

ஔ வையின்  தமிழ் பற்றை
ஹர ஹரோ ஹரா
(
ஹர ஹரோ ஹரா முருகா . . . )



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

My blogs :

www.aanmeegaula.blogspot.in  (For daily panchangam and slokas )

www.chennaisidhargal.blogspot.in

www.songsbyshanks.blogspot.in

www.shivsaitours.blogspot.in

Monday 5 November 2012

அதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012



மலர் போன்ற சிரிப்புந்தன் முகமே
பலர் வந்து கை தொழுவர் தினமே
புலர்கின்ற பொழுதுந்தன் அருளால்
மலர்ந்திட வேண்டும் நல் மலர் போல்
கரம் குவித்தால் அன்னையே - மன
பாரம் குறைக்கும் அன்னையே . . .

உள்நாடு வெளிநாடு எந்நாட்டிற்கும் என்றும் நீ சொந்தம்
அன்போடு பண்போடு நாடுவோர்க்கு என்றும் நீ பந்தம்
மலரோடு மனதோடு உன்னை வந்து பார்த்திட்டால் இன்பம்
காதோடு குறைபாடு சொன்னால் பறந்திடும் என் துன்பம்
அதிகாலை சூரியன் அன்னையே - உன்
பால் வடியும் கருணை முகம் அதுவே

ஏழைக்கும் கொழிக்கும் தைரியம் நீ தந்தாய்
தாழாத கீர்த்தியை அனைவர்க்கும் தந்தாய்
பாழான வாழ்வென்று வந்தோரை கடிந்தாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட அருளே நீ தந்தாய்
வண்ண மலர் அன்னையே
கண் இமைக்கும் உன் பூ முகமே



பூப்போல  பூப்போல சிரிப்பாயே
பால் போல  பால் போல மொழிவாயே நீயே
கால் போன போக்கில் நான் சென்றால்
வேல் போன்ற உன் விழியால் காப்பாயே

பூக்களால் பூஜித்தோம் உன்னை
பாக்களால் பாடினோம் உன்னை
காத்திடுவாய்  நீ என்றும் என்னை
அன்பால் நீ அனைவர்க்கும் அன்னை



வளர் திங்கள் போல் வாழ்வு வளர்ந்திட வேண்டும்
பலர் போற்றி பாராட்ட உயர்ந்திட வேண்டும்
மலர் போல தினம் நானே சிரித்திட வேண்டும்
தளிர் போல் மனம் நீயே கொடுத்திட வேண்டும்

அன்போடு பண்போடு பழகிட  நாங்கள்
புகழோடு பெயரோடு வாழ்வோமே என்றும்
கண்பார்வை ஒன்றால் கரை சேர்த்தாயே தாயே
என் உள்ளம் என்றும் உன்னை போற்றிடும் அன்னையே


rendu varusham pondyla (kuppai kottinadhukku !!!)  irundhadhukku
justify pandra maathiri edho ennaala mudinjadhu ANNAIyai patri konjam ezhudhi vitten.

THANKS A  LOT  MOTHER. . . !!!

Thursday 1 November 2012

ஷீரடி சாயியே சரணம் 01.11.2012

(சம்போ மகாதேவ தேவா
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )


ஷீரடி சாயியே சரணம்
என்றும் உன் துணை வேண்டியே
உன் பாதம் பணிவேன்
ஷீரடி சாயியே சரணம்


ன்புருவம் ஆனவரே சரணம்
அன்பெனும் ஆயுதம்  ஏந்தி
அமர்ந்தாய்  நீயே
அன்போடு தொழுவோம் உன்னை

ன்மீக குருவே சரணம்
ஆணவம் நீக்கி அன்போடு பழக
ஆனந்தம் பெற்றிடச் செய்வாய்

ன்முக இளவலே  சரணம்
இமயம் போல் அமைதியாய்
இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்த்தாய்
இடர்கள் நீக்கி சுகமே தருவாய்

சனின் அம்சமே சரணம்
ஈனப் பிறவிக்கும்
ஈந்தாயே  அருளை
ஈசனை தொழுவோமே உன்னை

ண்மையின் உருவமே சரணம்
உன்னதமாய் வாழ்ந்தாய்
உலகோர்க்கு  உவமையாய்
உன்னை சரணடைந்தோமே சாயி

க்கத்தின் உருவமே சரணம்
ஊற்று நீர் போல உள்ளத்தில்
உண்மையை வளர்ப்பாயே நீயே
ஊழ்வினை தீர்ப்பாயே சாயி

ன் சற்  குரு நாதா சரணம்
எங்கும் மணக்கும் பூப்போல
என் வாழ்வை மணக்கச் செய்வாய்
என்றும் மறவேனே சாயி

காந்த உருவே சரணம்
ஏற்றங்கள் தந்து மாற்றங்கள் தந்து
தேற்றிட்டாய்  சாயி நீயே
ஏக்கங்கள் தீர்ப்பாய் சாயி

ங்கரன் ரூபமே சரணம்
ஐந்து வாரங்கள் உன்னை தொழுதாலே
நைந்து போகும் துன்பங்களே
ஐயங்கள் களைவாயே சாயி

ப்பிலா குருவே சரணம்
ஒரு கணம்  உன்னை நினைத்தாலே போதும்
மறு கணமே காட்சி தருவாயே நீயே
ஒப்பற்ற மகானே சாயி

ங்கார  ரூபனே சரணம்
ஓதாமல் வேதம் உணர்ந்தாய் நீயே
ஓதுவோம் உந்தன் சத்சரிதம் தனையே
ஓர்வரம்  தருவாயே சாயி

வியம்  எதிர்ப்பவா  சரணம்
பௌர்ணமியில் வழிபட்டாலே போதும்
சௌக்கியமாய் வாழ வைப்பாயே
ஔ தத்தம்  ஆனவனே சாயி
-தேனுபுரீஸ்வர தாசன்