Monday 29 October 2012

100th song by தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்

100th song by தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்

எல்லாம் வல்ல
இறையருளின் துணையால்
அடியேனின்
100  வது பாடல் !
(18.06.2012  TO  28.10.12)
(Trying to post one by one  in www.songsbyshanks.blogspot.in ,
planning to bring 20-30 songs as a book on our
tour's  12th annual day during december)


(சம்போ மகாதேவ தேவா
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )

சிவனே  நீ தானே துணையே
என்றும் உன்  பாதம்  நாங்களே  சரண் அடைவோமே
சிவனே  நீ தானே துணையே

கைலாயம் உறையும் ஈசா
திரு அண்ணாமலை வந்து அமர்ந்தாய் நீயே
கைலாயம் உறையும் ஈசா (சிவனே. . . )

கைகூப்பி தொழுதோம் உன்னை
கை விடாது   காப்பாய் அருணா சலேஸா
கைகூப்பி தொழுதோம் உன்னை  (சிவனே. . . )

கண் மூடி தியானிப்போம் உன்னை
கண் இமை போல் காப்பாய் அருணா சலேஸா
கண் மூடி தியானிப்போம் உன்னை  (சிவனே. . . )

மூச்சால் அழைப்போம் உன்னை
வா என்று வாங்கி   சி என்று விட்டு  வா சி வா என்று
மூச்சால்  அழைப்போம் உன்னை  (சிவனே. . . )

செவியால் உன்புகழ் கேட்போம்
இப்புவியினில் நீ செய்த செயற்கரிய செயல்களை
செவியால் உன்புகழ் கேட்போம்  (சிவனே. . . )

வாயார உனைப்பாடி  மகிழ்வோம்
தாயாகவும் வந்து நீ செய்த செயல்களை
வாயார உனைப்பாடி  மகிழ்வோம்  (சிவனே. . . )

மனதால் உன்னையே நினைப்போம்
என்றும் நினைத்தாலே முக்தி தரும் அருணா சலேஸா
மனதால் உன்னையே நினைப்போம்  (சிவனே. . . )

காலால் கிரிவலம் வருவோம்
என்றும் மனநலம் காப்பாய்  அருணா சலேஸா
காலால் கிரிவலம் வருவோம்  (சிவனே. . . )

அங்கங்களால் உன்னை தொழுவோம்
சாஷ்டாங்கமாய் தண்டம் சமர்ப்பித்து சிவனே
அங்கங்களால் உன்னை தொழுவோம்  (சிவனே. . . )

இங்கு நீ எழுந்தருள்வாயே
பொங்கிடும்  இன்பமும் தங்கிடும் செல்வமும் தந்திட
இங்கு நீ எழுந்தருள்வாயே  (சிவனே. . . )

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Wednesday 24 October 2012

விஜய தசமி (24.10.12) ஸ்பெஷல்

(நீல கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம் - மெட்டு  )

விஜய தசமி (24.10.12) ஸ்பெஷல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஷீரடி சாயி ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
சிரித்த    படி  நீ    ஆடுகவே

சாயியே உன்னை வணங்குவோரை
தாய் போல் என்றும் காப்பவனே
வாயால் உன்னை பாடிடுவோம்
ஓயாமல் நீ காப்பாயே (ஆடுக . . . )

துவாரகா மாயி யில்  அமர்ந்தவனே
தாருகா வந்து ரிஷி நீயே
காருண்ய ரூபனே ஸ்ரீ சாயி
தாருமய்யா மன நிம்மதியே  (ஆடுக . . . )

வெப்ப மரத்தடி அமர்ந்தவனே
வேதனை தீர்த்து மகிழ்பவனே
வெய்யிலில் பயிர்  போல்  நான் வாடினேன்
வேரில் நீர் போல்  நீ அருள்வாய்  (ஆடுக . . . )

குருவாரம் வந்து வணங்கிடவே
ஒரு வரம் நீயே தருவாயே
மறுவாரம் நானே வருமுன்னே
தருவாயே நான் வேண்டியதை (ஆடுக . . . )

பச்சிளம் குழந்தைகள் நாங்களே
இசைகள் தீர்ப்பாய் ஸ்ரீ சாயி
பச்சைப்பயிர்  போல் வாழ்க்கையையே
பசுமையாய் மாற்றுவாய் ஸ்ரீ சாயி (ஆடுக . . . )

விஜய தசமியில் உன்னை வணங்க
ஜெயமே என்றும் வாழ்வினிலே
கஜபலம் தருவாய் ஸ்ரீ சாயி
நிஜ பக்தருக்கே ஸ்ரீ சாயி (ஆடுக . . . )

ஷீரடி வந்திட ஓர் முறையே
சீராகும் வாழ்வே உன்னாலே
போராடியோர் வாழ்வில் உயர்வாரே
தீராத துன்பமும் தீர்ந்திடுமே (ஆடுக . . . )

ஷீரடி வந்து சாயி உந்தன்
சீர் அடி பணிந்தே தொழுதோமே
சீராட்டி வளர்க்கும் தாய்போல
காப்பாற்றி  அருள்வாயே சாயியே (ஆடுக . . . )

Tuesday 23 October 2012

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி (23.10.12)

 துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
வாரீர் நாங்கள் வளம் பெறவே
ஓர் ஒன்பது நாட்களில் உங்களையே
பார் போற்றும் நவராத்திரி  தேவியாக (துர்கா . . . )

மலைபோல்  மனமது உறுதிபெற
மலைமகள் நீ அருள்வாய் ஜெயதுர்கா
மகிஷனை அழித்து  காத்தவளே 
எங்கள்  உள்ளம் மகிழ நீ அருள்வாய்
ஜெய துர்கா  ஸ்ரீ ஜெயதுர்கா
ஜெய துர்கா ஸ்ரீ ஜெயதுர்கா  (துர்கா . . . )

அலைபோல்  வாழ்வில்  கஷ்டங்களே
மலைத்தோம் நங்கள் மகாலக்ஷ்மியே
அலைமகள் உந்தன் பார்வைபட்டால்
அலைபாயும் வாழ்க்கை சீராகுமே
அஷ்டலக்ஷ்மியே அருள்வாய் நீ
கஷ்டங்கள் தீர்த்து காப்பாய் நீ    (துர்கா . . . )

கலை மகள் உந்தன் அருள் இருந்தால்
கவலை இன்றி உயர்வோமே
கல்விக்கு அதிபதி கலை வாணி
கல்வி செல்வம் தர வா நீ
கலை வாணி எங்கள் கலை வாணி
எங்கள் கவலைகள் தீர்ப்பாய் இனி நீ  (துர்கா . . . )

Monday 22 October 2012

ராகவேந்திரா ஞானகேந்திரா



 

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

துங்கா நதி தீர மங்கா புகழ் யதியே
எங்கும் உன் மிருத்திகை தரும் நவ நிதியே
பொங்கும் மனம்  மகிழ்ந்தே அடைய உன் திரு பதியே
பொங்கும்  இன்பம் தரமே உந்தன் முக மதியே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

தாங்கும் செல்வம் தருவாய் எங்கள் குல குருவே
மங்கும் இருள் வாழ்வில் துணை நீயே குருவே
எங்கும் உந்தன் அருளே உணர்ந்தோமே குருவே
எங்கும் துணை வருமே உந்தன் உருவே குருவே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

குருவார விரதத்தால் உனதருள் கிட்டிடுமே
குருவார தரிசனத்தால் மனம் அது மகிழ்ந்துடுமே
குருவாரம் வரும் வரையில் உன் நினைவு வாட்டிடுமே
குருவே உன்னை சரணடைந்தால் சகலமும் கிட்டிடுமே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா



- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
 
13-09-2012

ஷீரடி சாயியை பணிந்திட உடனே




(பிரம்ம முராரி மெட்டில் பாடவும் )

ஷீரடி  சாயியை பணிந்திட உடனே
போராடி வாழ்வில் வெற்றியே பெறுவோம்
பார்புகழ் ஷீரடி சாயியை நினைக்க
ஓர் துன்பம் வாராதே வாழ்வில் தானே

விண்ணுல கம்விட்டு  மண்ணுல கம்வந்து
விந்தை புரிந்தார் சாயி நாதர்
கண் கொண்டு  அவரை  பார்த்த   உடனே
முன் ஜென்ம  வினைகளும்   தீரும்   உடனே

நற்பண்பை  போதிப்பார் நாளும் சாயி
பற்பல அதிசயம் புரிந்தவர் சாயி
கற்பக தருவாய் அருள்வார் சாயி
நற்பலன் நாளும் தருவார் சாயி

தத்தாத் ரேயரின்  அவதாரம் சாயி
சித்தாந்தம் அறிந்தவர் ஷீரடி  சாயி
எத்திக்கும் ஒலிக்கும் அவர்புகழ் நாளும்
பக்திக்கு பணிந்து அருள்வார் சாயி

வேப்ப மரத்தடி அமர்ந்திட்ட சாயி
வேதனை   தீர்க்கும்    நம் உயிர்   தாயே
வேதனையோடு சாயியை நாடிட
சாதனை புரிவோம் சாயியின் அருளால்

நம்பி    கை கூப்பி   சாயியை  வணங்கிட
நம்பிக்கை வளர்ப்பார் நம் மனத்துள்ளே
வெம்பி வெதும்பி வாடிடு வோரை
அம்பிகை உரு கொண்டு அள்ளியே அணைப்பார்



குருவாரம் தோறும் சாயியை வணங்கிட
ஒருவரம் மகிழ்ந்தே அவரும் அருள்வார்
ஒரு முறை ஷீரடி  சென்று வந்தால்
கரு முதல் காப்பார் ஷீரடி சாயி

கஷ்டத்தில் நாமே கண் மூடி வணங்கிட
இஷ்டமாய் வந்து இனிதே அருள்வார்
இஷ்ட தெய்வமாய் சாயியை வணங்கிட
கஷ்டங்கள் நீக்கி சுகமே தருவார்
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
10-10-12 

மதுரை மீனாக்ஷி உலகெங்கும் உனதாட்சி




கஞ்சி காமாட்சி
உன்னை காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் போக்கும்
அருள் நிலவு முகம் காட்டும் -  எழில் (கஞ்சி காமாட்சி )


மதுரை மீனாக்ஷி
உலகெங்கும் உனதாட்சி
கையில் கிளி ஏந்தி
கண்ணில் மீன் ஆட்சி - செய்யும் (மதுரை ...)

எத்தனையோ  மனக்குறைகள்
நேற்று வரை என்னுள்
அத்தனையும் கொட்டி விட்டேன்
இன்று உந்தன் கண்ணுள்
சித்தமெல்லாம் உன் நினைவே
சின்மயா ரூபிணியே
சுத்த மனம் ஆக்கிடுவாய்
ஸ்ரீ சக்ர நாயகியே  - தாயே (மதுரை ...)

பிள்ளை தமிழ் கேட்க நீ
மன்னன் மடி அமர்ந்தாய்
வள்ளலாக மாறி ஒரு
மாலையை அணிவித்தாய்
உள்ளமது உருகி நான்
உன்னை சரணடைந்தேன்
கள்ளத்தனம் நீக்கி என்
உள்ளமதை காப்பாய் - தாயே (மதுரை ...)

பச்சை கிளி கையில் கொண்டு
வளர்ந்த என் தாயே
இசையெல்லாம் தீர்த்தே
அருள்வாய் நீயே
அச்சோ என் வாழ்வதுவே
வீணாய் கழிந்ததுவே
இச்செகத்தோர்  எல்லாம் இனி
மெச்சிட செய்திடுவாய்  - தாயே (மதுரை ...)

நான் மாடக் கூடலிலே
கால் மாறி ஆடினாரே
மான் மழு ஏந்திய நம்
மதுரை சுந்தரேசர்
வான் மழை மேகம் கொண்டு
உன் எல்லையை காட்டினாரே
என் பிழை பொருத்தருள சொல்வாயம்மா (மதுரை ...)

எல்லாம் வல்ல சித்தராக
மதுரை மாநகர் வந்தாரே
கல் யானையை கரும்பை
தின்னச் செய்தாரே
கல்லான என் மனதை
கரைத்திட சொல்லம்மா
நல வழி படுத்தி எனை
நடத்திட சொல்லம்மா - தாயே (மதுரை ...)

பௌர்ணமி நாளில் உன்னை
தரிசிக்க வந்தேனே
சௌபாக்கியம் அனைத்தும் நீ
தந்திடுவாய் தாயே
சௌந்தரவல்லி உந்தன்
சுந்தர ரூபம் கண்டு
மௌனமாய் கரம் குவித்தேன்
மனம் மகிழ செய்வாயே - தாயே (மதுரை ...)

வைகை கரை ஓரத்திலே
வையகம் ஆண்டிடவே
தையலாய் வந்தவளே
தரணியை ஆண்டவளே
மையலை கொண்டாயே
மகேசன் அவன் மீதே
கைத்தலம் பற்றினையே
கன்னி மீனாக்ஷி  - தாயே (மதுரை ...)

வேண்டுவோர் வேண்டுவதை
விரும்பி அருள்பவளே
காண்போர் கல் மனதை
கரைத்தே அருள்பவளே
வான் புகழ் வைகை கரை
அமர்ந்த மீனாக்ஷி
யான் எனது என்பவற்றை
அழித்திடுவாய் தாயே - (மதுரை ...)

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪  written on 29-09-12